நுகர்வோர் காவலன் மாத இதழ்

சந்தாதாரர் Login


Page#of total: N


ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் 1991 ம் ஆண்டு முதல் நுகர்வோர் காவலன் மாத இதழை வெளியிட்டு வருகிறது .

நுகர்வோர் அறியாமையை போக்கி நுகர்வோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த இதழின் நோக்கம்.

பல பயனுள்ள தகவல்கள், தீர்ப்புகள், விழிப்புணர்வு செய்திகள், நுகர்வோர் பிரச்சனைகள் என பல சுவையான அம்சங்களுடன் வெளிவருகிறது.

இந்த நுகர்வோர் காவலன் மாத இதழ் சந்தா தாரர்களுக்கு தபால் வழியாக அனுப்பி வைக்கப் படுகிறது.

எவ்வித இலாப நோக்கம் இல்லாது சமுதாய நலன் கருதி வெளிவரும் இந்த புத்தகத்தை படித்து பயன் பெற வேண்டி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தபால் செலவுடன் கூடிய ஆயுள் சந்தா ரூ 500/- மட்டுமே.

ஆயுள் சந்தா செலுத்த வங்கி கணக்கின் விபரம்

A/c Name : Erode District Consumer Protection Center,
C/A No: 1129115000023666
Bank & Branch
KVB Erode Main Branch
IFS CODE: KVBL0001129

செல் : 98427 26048

சந்தா தொகையை இந்த qr code மூலமாகவும் செலுத்தலாம்.

UPI: Q52825105@ybl


சந்தா விபரங்கள் மற்றும் இரசீது பற்றி தொடர்பு கொள்ள:

ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம்
பிரப் சாலை,
ஈரோடு.
செல் : 94877 75762.

நுகர்வோர் காவலன் வலையொளி

ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம்

CPC ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம், கட்சி சாரா, இலாப நோக்கற்ற, அரசு பதிவு பெற்ற, தன்னார்வ சமூக சேவை அமைப்பு. சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற திரு. SKM மயிலானந்தன் அவர்கள் இவ்வமைப்பின் தலைவாரக இருந்து வழிநடத்தி வருகிறார். R. பாலசுப்ரமணியன் ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பொதுச் செயலாளராக சேவையாற்றி வருகிறார். நுகர்வோர் நல பணியை கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். தேசிய அளவிலே சிறந்த நுகர்வோர் பாதுகாப்புக் குழுவிற்கான விருதைப் பெற்றுள்ளோம். தமிழக அரசு R. பாலசுப்ரமணியன் அவர்களை சிறந்த நுகர்வோர் ஆர்வலர் என தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்துள்ளது.

நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘நுகர்வோர் காவலன்’ எனும் மாத இதழை 1991ம் ஆண்டுமுதல் பிரசுரித்து வருகிறோம்.
பள்ளி கல்லூரிகளில் மாணவருக்காக ‘கன்ஸ்யுமர் கிளப்’ அமைப்பை துவக்கி அவர்களுக்கு நுகர்வோர் கல்வியை அளித்து வருகிறோம். விழிப்புணர்வுக் கூட்டங்கள், பயிலரங்கள், இசையோடு கூடிய நாடகங்கள், கிராமியப் பாடல்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட சுழலும் தானியங்கி கருவிகள் மூலம் பல்வேறு பிரிவுகளில் தொடர்பான அறிய தகவல்கள் அடங்கிய படக்கண்காட்சி பார்வையாளர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும். உணவுக் கலப்படங்களை கண்டறிவது எப்படி என்பதை எளிய பரிசோதனை விளக்கங்கள் மூலம் செய்து காண்பிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு பரிகாரம் பெற்றுத்தர தேவையான அனைத்து உதவிகளையும் கட்டணமின்றி செய்து தருகிறோம். ‘நுகர்வோர் காவலன்’ மாத இதழைப் பெறவிரும்பினால் ரூ. 500/- மட்டும் டெபாசிட் சந்தா செலுத்துவதன் மூலம் ஆயுட்காலம் வரை இந்த இதழை பெறலாம். சீரிய சமுதாயப் பணியாற்றிவரும் இவ்வியக்கத்தில் இணைந்துகொள்ள விரும்பினால் ரூ. 500/- மட்டும் ஆயள் சந்தா செலுத்தி உறுப்பினராகலாம். இவ்வியக்கம் செய்துவரும் நற்பணிகளுக்கு உதவ விரும்பினால் நிதியுதவி செய்திடலாம். வாருங்கள், எங்களோடு இணையுங்கள், ஏய்த்தலில்லாத விழிப்புணர்வு கொண்ட நல்லதோர் சமுதாயம் படைப்போம்.

தொடர்பு கொள்ள

தலைவர்:

திரு. SKM மயிலானந்தன்

பொதுச்செயலாளர்:

திரு. R. பாலசுப்ரமணியன்,

தொலைபேசி எண்:

+919842726048

முகவரி:

R. பாலசுப்பிரமணியன்,
மாவட்டச் செயலாளர்,
ஈரோடு மாவட்டநுகர்வோர் பாதுகாப்பு மையம்
நவபவனம் முதல் தளம்,
ஈரோடு மாநகராட்சி அருகில் ,
பிரப் சாலை,
ஈரோடு - 638 001

மின்னஞ்சல்:

gmail: rbala18

UPI:

Q52825105@ybl


UPI மூலம் பணம் செலுத்தினால் , whatsapp +919842726048 மூலம் கீழே குறிப்பிட்டுள்ள விவரங்களை அனுப்புங்கள்.

பெயர்: ____
முகவரி: _____
தொலைபேசி எண்: ____
நுகர்வோர் காவலன் சந்தா : Rs. ___
ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய உறுப்பினர் சந்தா: Rs. ___
நன்கொடை: Rs. ___